Sunday, April 13, 2008

'காயிதே மில்லத்தின் கருத்துரைகள்' நூல் வெளியீட்டு விழா! குவைத் இ.யூ.முஸ்லிம் லீக் ஏற்பாடு!

03-04-2008 வியாழக்கிழமை மாலை 7.00 மணியளவில் குவைத், அப்பாஸிய்யா பகுதியில் உள்ள இந்தியன் சென்ட்ரல் ஸ்கூல், காயிதே மில்லத் (ரஹ்) அரங்கத்தில் குவைத் இ.யூ.மு.லீக்கின் அமைப்பாளர் டாக்டர் கே.எஸ். அன்வர் பாட்சா அவர்கள் கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் (ரஹ்) அவர்களின் கருத்தாழமிக்க நாடாளுமன்ற, சட்டமன்ற உரைகள் மற்றும் பத்திரிகை நேர்காணல்களை மிகவும் சுவையாக தொகுத்து எழுதிய 'கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத்தின் கருத்துரைகள்' நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. அல்ஹம்து லில்லாஹ்...! குவைத் கேரளா முஸ்லிம் கலாச்சாரப் பேரவை (KKMCC) நடத்திய இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் 60வது ஆண்டு பொன்விழா நிகழ்ச்சியின் ஒரு அங்கமாக நிகழ்ந்த இந்நூல் வெளியீட்டு விழாவை குவைத் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (KIUML) ஏற்பாடு செய்திருந்தது. குவைத் கேரளா முஸ்லிம் கலாச்சாரப் பேரவையின் தலைவர் கொரட்ரபுரம் முஹம்மது ரஃபீக் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் குவைத் இ.யூ.மு.லீக்கின் செயலாளர் சத்திரமனை ஏ. ஹஸன் முஹம்மது, பொருளாளர் ஷாஹின் ஷா மற்றும் தலைமை நிலையச் செயலாளர் ஏ. கலீலுர் ரஹ்மான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கேரளா இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தலைவர் பானக்காடு சைய்யத் முஹம்மது அலி ஷிஹாப் தங்கள் அவர்கள் இந்நூலை வெளியிட, குவைத் கோல்டன் அல்மாஸ் உணவக அதிபர் முஹம்மது முஸ்தஃபா, குவைத் இ.யூ.மு.லீக்கின் தலைவர் முஹம்மது ஃபாரூக், குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்க(K-Tic )த்தின் பொதுச் செயலாளர் பரங்கிப்பேட்டை மவ்லவீ அ.பா. கலீல் அஹ்மத் பாகவீ மற்றும் துணைத்தலைவர் மவ்லவீ எம். முஹம்மது மீராஷா ஃபாஜில் பாகவி ஆகியோர் நூலை பெற்றுக் கொண்டனர். கேரள இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் பொதுச் செயலாளரும், கேரள அரசின் முன்னாள் தொழிலாளர் நலத்துறை அமைச்சருமான பி.கே. குஞ்சாலி குட்டி, கேரள சட்டமன்ற உறுப்பினர்கள் ஜி. கார்த்திகேயன், தோமஸ் சாண்டி மற்றும் கேரள முன்னாள் அமைச்சர் சேர்குளம் அப்துல்லாஹ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். நூலின் தொகுப்பாசிரியரான குவைத் இ.யூ.மு.லீக்கின் அமைப்பாளர் டாக்டர் கே.எஸ். அன்வர் பாட்சா அவர்கள் நூல் குறித்து அறிமுகவுரையாற்றி ஏற்புரையாற்றியதுடன் இவ்விழா இனிதே நிறைவுபெற்றது. இச்சிறப்பு மிகு விழாவில் மேதகு குவைத் இந்திய தூதர் எம். கணபதி, கேரள தொழிலதிபர் பத்மஸ்ரீ எம்.ஏ. யூஸுஃப் அலீ, குவைத் இந்திய இஸ்லாமிய கூட்டமைப்பின் தலைவர் அல்ஹாஜ் முக்தார் மஃரூப், குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தின் இணைப் பொருளாளர் அல்ஹாஜ் எச். முஹம்மது நாஸர், தமிழ்நாடு முஸ்லிம் கலாச்சாரப் பேரவையின் காப்பாளர் குழு உறுப்பினர்கள் சோழபுரம் ஜாஹிர், திருபுவனம் ஜாஹிர், காரைக்கால் எஸ்.எம். ஆரிஃப் மரைக்காயர், குவைத், இந்திய அரசு அதிகாரிகள், முக்கிய பிரமுகர்கள், குவைத் வாழ் தமிழக மற்றும் கேரள இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கர்கள், ஆர்வலர்கள், அனுதாபிகள், பல்வேறு தமிழ் இஸ்லாமிய அமைப்பைச் சேர்ந்தவர்கள் அரங்கம் நிரம்ப கலந்து கொண்டனர். குவைத் இ.யூ.மு.லீக்கின் அதிகாரப்பூர்வ வலைப்பூவான www.kuwaitiuml.blogspot.com ல் நிகழ்ச்சி குறித்த செய்தியையும், புகைப்படங்களையும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும், மேலதிக விபரங்களுக்கும், தங்களின் கருத்துக்களுக்கும், ஆலோசனைகளுக்கும் iumlkuwait@yahoo.com / iumlkuwait@gmail.com என்ற மின்னஞ்சல்கள் வாயிலாக தொடர்பு கொள்ளும்படியும் குவைத் இ.யூ.மு.லீக்கின் செய்தி அறிக்கை தெரிவிக்கின்றது.

Tuesday, April 1, 2008

குவைத் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (KIUML) ஏற்பாடு செய்யும் 'காயிதே மில்லத்தின் கருத்துரைகள்' நூல் வெளியீட்டு விழா!

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்

இன்ஷா அல்லாஹ் வருகின்ற 03-04-2008 வியாழக்கிழமை மாலை 7.00 மணியளவில் குவைத், அப்பாஸிய்யா பகுதியில் உள்ள இந்தியன் சென்ட்ரல் ஸ்கூல், காயிதே மில்லத் (ரஹ்) அரங்கத்தில் குவைத் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (KIUML) ஏற்பாடு செய்யும் (குவைத் இ.யூ.மு.லீக்கின் அமைப்பாளர் டாக்டர் கே.எஸ். அன்வர் பாட்சா அவர்கள் கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் (ரஹ்) அவர்களின் கருத்தாழமிக்க நாடாளுமன்ற, சட்டமன்ற உரைகள் மற்றும் பத்திரிகை நேர்காணல்களை மிகவும் சுவையாக தொகுத்து எழுதிய) 'கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத்தின் கருத்துரைகள்' நூல் வெளியீட்டு விழா நடைபெற இருக்கின்றது.

குவைத் கேரளா முஸ்லிம் கலாச்சாரப் பேரவை (KKMCC) நடத்தும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் 60வது ஆண்டு பொன்விழா நிகழ்ச்சியின் ஒரு அங்கமாக நிகழும் இந்நூல் வெளியீட்டு விழாவிற்கு குவைத் கேரளா முஸ்லிம் கலாச்சாரப் பேரவையின் தலைவர் ஆலி ஜனாப் கொரட்ரபுரம் முஹம்மது ரஃபீக் அவர்கள் தலைமை தாங்குகின்றார்.

குவைத் இ.யூ.மு.லீக்கின் செயலாளர்கள் மவ்லவீ ஏ. அப்துஸ் ஸலாம் தாவூதி, சத்திரமனை ஏ. ஹஸன் முஹம்மது, பொருளாளர் ஷாஹின் ஷா, தலைமை நிலையச் செயலாளர் கலீலுர் ரஹ்மான், மற்றும் முன்னாள் பொதுச் செயலாளர் சமுதாயக் கவிஞர் எழுச்சிப் பாவலர் விழுப்புரம் ஷாஜி ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்க(K-Tic)த்தின் பொதுச் செயலாளர் பரங்கிப்பேட்டை மவ்லவீ அ.பா. கலீல் அஹ்மத் பாகவீ அவர்கள் நூல் குறித்த அறிமுகவுறையாற்றுவதுடன் நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்குகின்றார்.

கேரளா இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தலைவர் பானக்காடு சைய்யத் முஹம்மது அலி ஷிஹாப் தங்கள் அவர்கள் இந்நூலை வெளியிட, குவைத் லக்கி அச்சக அதிபர் சுலைமான் பாட்சா, குவைத் சுப்ரீம் கார்கோ அதிபர் முஹம்மது சித்தீக், குவைத் கோல்டன் அல்மாஸ் உணவக அதிபர் முஹம்மது முஸ்தஃபா, குவைத் இ.யூ.மு.லீக்கின் தலைவர் முஹம்மது ஃபாரூக் மற்றும் குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தின் துணைத்தலைவர் மவ்லவீ முஹம்மது மீராஷா ஃபாஜில் பாகவி ஆகியோர் நூலை பெற்றுக் கொள்வர்.

அகில இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் பொதுச் செயலாளரும், இந்திய அரசின் வெளியுறவுத்துறை இணை அமைச்சருமான இ. அஹ்மத் அவர்களும், கேரள இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் பொதுச் செயலாளரும், கேரள அரசின் முன்னாள் தொழிலாளர் நலத்துறை அமைச்சருமான பி.கே. குஞ்சாலி குட்டி அவர்களும் வாழ்த்துரை வழங்க இருக்கின்றனர்.

நூலின் தொகுப்பாசிரியர் குவைத் இ.யூ.மு.லீக்கின் அமைப்பாளர் டாக்டர் கே.எஸ். அன்வர் பாட்சா அவர்கள் ஏற்புரையாற்றுவதுடன் இவ்விழா இனிதே நிறைவுபெறும். இவ்விழாவில் மேதகு குவைத் இந்திய தூதர் எம். கணபதி, கேரள சட்டமன்ற உறுப்பினர்கள் ஜி. கார்த்திகேயன், தோமஸ் சாண்டி, கேரள முன்னாள் அமைச்சர் சேர்குளம் அப்துல்லாஹ் மற்றும் குவைத், இந்திய அரசு அதிகாரிகளும், முக்கிய பிரமுகர்களும் கலந்து கொள்ள இருக்கின்றனர்.

இச்சிறப்பு மிகு விழாவில் குவைத் வாழ் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கர்கள், ஆர்வலர்கள், அனுதாபிகள் அனைவரும் குடும்பத்துடன் பங்கேற்று பயனடையுமாறு நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சிறப்பான முறையில் செயது கொண்டிருக்கும் குவைத் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (KIUML) நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் களப்பணியாளர்கள் அன்புடன் அழைக்கின்றனர்.

குவைத் இ.யூ.மு.லீக்கின் அதிகாரப்பூர்வ வலைப்பூவான www.kuwaitiuml.blogspot.com லும் நிகழ்ச்சி குறித்த செய்திகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும், மேலதிக விபரங்களுக்கு iumlkuwait@gmail.com என்ற மின்னஞ்சல்வாயிலாகவோ, 6490687, 7841399, 6016737, 7549025, 7862316 போன்ற தொலைபேசி எண்களிலோ தொடர்பு கொள்ளும்படியும் லீக் செய்தி அறிக்கை தெரிவிக்கின்றது.

செய்தி :
குவைத் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (KIUML)
வலைப்பூ:
www.kuwaitiuml.blogspot.com
மின்னஞ்சல்: iumlkuwait@gmail.com

Tuesday, January 22, 2008

Republic Day

On the occasion of Republic Day of the India, the Flag Hosting Ceremony will take place at the Indian Embassy premises on Arabian Gulf Street on Saturday, January 26, 2008 at 9 A.M. The flag hoisting will be followed by the reading of the message of His Excellency the President of India by the Ambassador of India and rendition of patriotic songs by Indian school children. There will be an Open House Reception after the Programme.

All Indian nationals are cordially invited to attend the function.